டைரக்டர் மகேஷ் பாபு இயக்கத்தில் நவின் பொலிஷெட்டி, அனுஷ்கா ஷெட்டி இருவரும் இணைந்து நடித்திருக்கும் படம் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி. யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ரதன் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் சமையல் கலைஞராக அனுஷ்கா நடித்து இருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் ஒரு பாடலை பாடுவதற்கு நடிகர் தனுஷ்  சம்மதம் தெரிவித்து உள்ளார். இப்பாடலை மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தின் அடுத்த சிங்கிள் ஆக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.