தமிழ் திரையுலகில் நடிகர் விஷால் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிகராக மட்டுமின்றி தேவி அறக்கட்டளை வாயிலாக தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகிறார். அதன்படி தற்போது +2 மாணவர்களுக்காக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது பிளஸ்+2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் விஷால் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

நம் மக்கள் நல இயக்கத்தின் பொறுப்பாளர்கள் உங்களது மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பிளஸ்+2 பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கி தேர்ச்சி பெற்று மேற்கொண்டு படிக்க முடியாத மாணவ, மாணவிகள் பற்றிய முழு விபரங்களையும் “தேவி அறக்கட்டளை” மின் அஞ்சல் [email protected] முகவரிக்கு அனுப்புங்கள். அவர்களது மனுக்கள் பரிசீலினை செய்யப்பட்டு மேற் படிப்பிற்கு உதவிகள் செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் என விஷால் மக்கள் நல இயக்கத்தின் செயலாளரும் தேவி அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளருமான ஹரி கிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.