வாட்ஸ்அப் வாயிலாக நடைபெறும் மோசடியை தடுக்க ட்ரூகாலர் அதன் ஸ்பேம் கண்டறிதல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அத்தகைய அழைப்பாளர்களைக் கண்டறிந்து அவர்களை பிளாக் செய்யவும் (அ) ரிப்போர்ட் செய்யவும் பயனர்களை அனுமதிக்கிறது. இப்போது இந்த புது ஐடி கண்டறிதல் அம்சம் பீட்டா வெர்ஷனில் இருக்கிறது.

எதிர்காலத்தில் இந்த அம்சமானது அனைவருக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வாட்ஸ்அப்பில் ட்ரூகாலர் ஸ்பேம் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து நாம் தெரிந்துகொள்வோம்.  அதன்படி, கூகுள் ப்ளே ஸ்டோரில் ட்ரூகாலர் என தேடவும். இதையடுத்து லிஸ்டிங் பேஜை கீழே ஸ்க்ரோல் செய்து பீட்டா சோதனையாளர் பிரிவின் கீழ் உள்ள ஜாயின் என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.

கொஞ்ச நேரம் காத்திருந்து பிளே ஸ்டோரில் மீண்டும் ட்ரூகாலரை தேடவும். அதன்பின் பீட்டா அப்டேட்டை இன்ஸ்டால் செய்யவும். ட்ரூகாலரை திறந்து செட்டிங்ஸ் என்பதற்கு போக வேண்டும். அதனை தொடர்ந்து அழைப்பாளர் ஐடியை டேப் செய்து வாட்ஸ்அப் மற்றும் பிற மெசேஜிங் செயலிகளில் தெரியாத எண்ணை அடையாளம் காண செய்யவும்.