இணையவேகம் மிக குறைவாக உள்ளதால் பல இன்னல்களை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படலாம். இந்த நிலையில்வைஃபை ரவுட்டரின் வாயிலாக பெறும் இணையவேகத்தை இரட்டிப்பாக்கும் சில டிப்ஸ்களை நாம் தற்போது அறிந்துக்கொள்வோம். உங்களது Wi-Fi ரூட்டரை அமைக்க வீட்டின் மையபகுதி பொதுவாக சிறந்த இடமாகும். எனினும் இது அனைத்து வீட்டிற்கும் சரியாக பொருந்தும் என்று கூற முடியாது.

நீங்கள் எங்கு அதிகமாக இணையத்தை பயன்படுத்துகிறீர்கள் என்பதையும் இது சார்ந்து உள்ளது. ரவுட்டர் தங்களது சிக்னலை கீழ் நோக்கி பரப்பக்கூடிய தன்மையை கொண்டுள்ளது. ஆகவே கவரேஜை அதிகரிக்க ரூட்டரை முடிந்தவரையிலும் உயரமாக வைப்பது நல்லது. அதனை உயரமான அலமாரியில் வைப்பதற்கு முயற்சிக்கவும் (அ) சுவரில் பொருத்தலாம்.

நம்மில் பலர் வைஃபை ரவுட்டரை ஆப் செய்வதே இல்லை. வைஃபை வேகத்தை அதிகரிப்பதற்கு அதனை 4-5 தினங்களுக்கு ஒருமுறை அதை ஆன் மற்றும் ஆஃப் செய்யவேண்டும். இதன் காரணமாக கருவி தானகவே அப்டேட் ஆகி வேகம் அதிகரிக்கும். ரவுட்டருக்கு அருகேயுள்ள சுவர்கள், பெரிய தடைகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்றவை சிக்னலில் குறுக்கிடுகிறது. உதாரணமாக மைக்ரோவேவ்கள் 2.4GHz பேண்டில் வலுவான சமிக்ஞையை வெளியிடுவதால் வைபை வேகத்தை பாதிக்கும்.