பணக்கார நாடு என்று உலகமே அண்ணாந்து பார்க்கும் நாடு தான் சுவிட்சர்லாந்து. அங்குள்ள மக்கள் இலவச உணவுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் புகைப்படம் வெளியாகிய அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதேபோல் இங்கிலாந்து நாட்டிலும் உணவு வங்கிகளை சார்ந்து இருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வு அறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது. Independent food aid network என்னும் அமைப்பு ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வில் நாட்டில் உள்ள 90% உணவு வங்கிகளில் முன்பு இல்லாத அளவிற்கு அதிக அளவிலான மக்கள் கூடியுள்ளனர்.
இந்த எண்ணிக்கையானது 2021-யை ஒப்பிடும்போது அதிகம் ஆகும். மேலும் உணவு வங்கிகளில் காத்திருப்போரில் பெரும்பாலானவர்கள் ஓய்வு பெற்றவர்கள், அரசு மருத்துவ ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்தான். இதற்கு காரணம் விலைவாசி உயர்வு தான் என்று கூறப்பட்டுள்ளது. ஊதியம் போதுமான அளவில் இல்லாததாலும் அரசினுடைய உதவி கிடைக்க தாமதமாகியதாலும் அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டதாக தெரிய வருகிறது. இப்படி ஒரு சூழ்நிலையில் சுவிட்சர்லாந்திலும் இங்கிலாந்திலும் உள்ள உணவு வங்கிகள் “எங்களால் இனி சமாளிக்க முடியாது. அரசுதான் இதனை ஏற்று நடத்த வேண்டும்” என்று கூறியுள்ளது.