பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான். இவர் தற்போது மணிஷ் ஷர்மா இயக்கத்தில் டைகர் 3 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கத்ரீனா கைஃப், இம்ரான் காஸ்மி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் சூட்டிங் மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பின் போது திடீரென நடிகர் சல்மான் கானுக்கு தோள்பட்டையில் அடிபட்டுள்ளது.

இதனால் நடிகர் சல்மான் கான் வலி தாங்க முடியாமல் துடித்த நிலையில் அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி செய்தனர். அப்போது நடிகர் கானின் தோள்பட்டையில் மருத்துவர்கள் பேண்டேஜ் ஒட்டியுள்ளனர். மேலும் இது தொடர்பான புகைப்படங்களை நடிகர் சல்மான் கான் வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்த நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.