கோலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி டைரக்டராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இப்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பணிகள் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது படங்களில், காதலர்களை எப்போதுமே பிரித்து வைத்துதான், காண்பிப்பார், அவர் ஒரு சாடிஸ்ட் என்ற மீம்ஸ்கள் இணையத்தில் வைரலானது.

இதனால் இது குறித்து லோகேஷிடம் சமீபத்தில் கேட்டபோது, “அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. படத்தின் கதைக்காகவே அப்படி செய்கிறேன். இனி வரும் தனது படங்களில் காதலர்களுக்கு மகிழ்ச்சியான முடிவை தர முயற்சிக்கிறேன்” என புன்னகையுடன் தெரிவித்தார்.