தமிழ் சினிமாவில் மங்களநாயகி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிஷா நூர். இந்த படத்திற்கு பிறகு கமல்ஹாசனுடன் சேர்ந்து டிக் டிக் டிக், ரஜினியுடன் சேர்ந்து ஸ்ரீ ராகவேந்திரா போன்ற படங்களில் நடித்துள்ளார். மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பல ஹிட் படங்களில் நடித்த நிஷா ஒரு காலத்தில் திடீரென சினிமாவை விட்டு விலகினார். நடிகை நிஷாவை தயாரிப்பாளர் ஒருவர் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததாக அப்போது தகவல்கள் பரவியது.

கடந்த 2007-ம் ஆண்டு நாகை அருகே உள்ள தர்காவில் உடல் மெலிந்து எலும்புகள் தெரிய மோசமான நிலையில் நிஷா படுத்துக்கிடந்துள்ளார். அவர் மீது எலும்புகள் மற்றும் புழுக்கள் ஓடிக்கொண்டிருந்தது. அவரை முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த சிலர் மீட்டு தாம்பரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது தெரிய வந்தது. மேலும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிஷா 2007-ம் ஆண்டு உயிரிழந்தார்.