இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் சென்ற மாதம் வெளியான அயலி வெப் தொடரில் அபி நட்சத்திரா, அனுமோள், மதன், லிங்கா, சிங்கம் புலி என பலர் நடித்திருந்தார்கள். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையுடன் வெளியான இந்த தொடருக்கு அனைவரிடமும் நல்ல வரவேற்பு பெற்றது.

மேலும் சோசியல் மீடியாவில் விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த நிலையில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அயலி தொடரை இயக்கிய முத்துக்குமாரை அழைத்து பரிசளித்து பாராட்டு தெரிவித்து இருக்கின்றார்.

இந்த தொடர் குறித்து இணையத்தில் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது, அயலி ஜி 5 வெப் சீரிஸ், வயதுக்கு வந்ததை மறைத்து மருத்துவர் கனவோடு படிக்கும் மாணவியின் கதை, குழந்தை திருமணத்திற்கு எதிரான பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இந்த படம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று என கூறி பாராட்டை பதிவிட்டு இருக்கின்றார்.