தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து வெற்றி படங்களை பதிவு செய்து தற்போது நடிகர் விஜயின் லியோ திரைப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனம் தொடங்க இருப்பதாக ஒரு தகவல் இணையத்தில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. அதன்படி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய  நெருங்கிய நண்பரும் இயக்குனருமான ரத்னகுமார் இயக்கும் ஒரு படத்தையும், சியான் விக்ரம்  நடிக்கும் ஒரு படத்தையும்  தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் இதெல்லாம் வேண்டாத வேலை. தயாரிப்பு நிறுவனம் தொடங்குவது ஒரு சாதாரண விஷயம் கிடையாது. அதில் ஏதேனும் சிறு பிரச்சனை வந்துவிட்டாலும் அது லோகேஷ் கனகராஜை மிகப்பெரிய அளவில் பாதிக்கும். எனவே இயக்குனராக மட்டுமே உங்கள் கேரியரை கவனியுங்கள். தயாரிப்பு நிறுவனம் தொடங்க வேண்டாம் என்று கூறி வருகிறார்கள். மேலும் தயாரிப்பு நிறுவனம் தொடங்குவது தொடர்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.