நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு பயணம் மேற்கொள்வதாக இருந்த பாகிஸ்தான் பிரதமர் தனது பயணத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்துள்ளார்.

மிக மோசமான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகிறது. துருக்கி வரலாற்றில் கருப்பு பக்கமாக இந்த நிலநடுக்கம் மாறி உள்ளது. அந்நாட்டை சேர்ந்த சுமார் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் கட்டிட இடுப்பாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. லட்சக்கணக்கான குழந்தைகள் பெற்றோரை இழந்து அனாதையாக மாறியுள்ளனர். இந்த நிலையில் இந்தியா நிவாரண உதவிகளை அளித்து துருக்கியின் பாராட்டை பெற்றதால் பாகிஸ்தான் பொறாமை அடைந்துள்ளது. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது போல இந்த நேரத்தில் பாகிஸ்தான் பிரதமர் நான் நேரிலேயே வருகிறேன் என மரபுக்கு ஒவ்வாத விதத்தில் கூறியதால் தான் ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

துருக்கி நாட்டின் இக்கட்டான நேரத்தில் நேராக சென்று மத ரீதியாக துருக்கியின் நல்லெண்ணத்தை சம்பாதிக்கவே பாகிஸ்தான் பிரதமர் முயன்றிருக்கிறார். பாகிஸ்தானை பொருத்தவரை உலக அரங்கில் இந்தியா மதசார்பற்ற நாடு என்ற தோற்றத்துடனும் அல்லது ராஜ ரீதியான உறவுகளில் பாரம்பரியங்களை கடைபிடிப்பதையோ விரும்பாத நாடு. மத ரீதியான துருப்பு ஊசிகளை வைத்து சர்வதேச அரங்கில் பலமுறை நாடகமாடியும் நேர்மையான பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் பாகிஸ்தானின் அரசியலை புறந்தள்ளிவிட்டன என்பதுதான் வரலாறு.

பொதுவாகவே ஒரு நாட்டில் பேரிடர் ஏற்பட்டுள்ள காலத்தில் வெளிநாட்டு தலைவர்கள் அங்கு நேரடியாக செல்ல மாட்டார்கள். உள்நாட்டிலேயே மிகப்பெரிய அளவுக்கு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் இவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டியதும் வரவேற்க வேண்டியதுமான நிலையை உருவாக்கவே மாட்டார்கள். இந்த குறைந்தபட்ச நாகரிகம் கூட தெரியாமல் பாகிஸ்தான் பிரதமர் நேரில் வருகிறேன் என கூறியதன் மூலம் உலக அரங்கில் பாகிஸ்தானை கைக்கொட்டி சிரிக்கும் அளவிற்கு தள்ளிவிட்டார் பாகிஸ்தான் பிரதமர்.

பாகிஸ்தான் பிரதமர் ஒன்றும் தானாக இந்த பயணத்தை ரத்து செய்யவில்லை. தனது வருகையை பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் மூலம் செபாஸ் ஷெரிடன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஆனால் அடுத்த சில மணி நேரங்களிலேயே துருக்கி பிரதமரின் சிறப்பு உதவியாளர் அந்த ட்விட்டர் பதிவுக்கு பதில் அளித்துள்ளார். அதில் இந்த நேரத்தில் துருக்கிக்கு தேவைப்படுவது எல்லாம் உதவிகள் தான். பிற நாட்டு தலைவர்களை உபசரிப்பதை பிறகு தான் பார்க்க முடியும் என கூறியதுடன் நிவாரண பணியாளர்களை மட்டும் அனுப்புங்கள் என முகத்தில் அடித்தார் போல் கூறிவிட்டார்.

துருக்கியை பொறுத்தவரை 1923 ஆம் ஆண்டிலேயே மன்னராட்சிக்கு முடிவு கட்டிய நாடு. முஸ்தபா கபல் பாஷா துருக்கியை குடியரசாக அறிவித்து மத சார்பற்ற நாடு என அறிவித்தார். எனவே அதன் பாரம்பரியமும் மரபும் செழுமை மிக்கது. இந்த நிலையில் பாகிஸ்தான் போன்ற தீவிரவாதத்தை ஆதரிப்பதற்கு தவறாக இஸ்லாமியத்தை பயன்படுத்துவதை துருக்கி ஏற்கனவே முகச்சுளிப்போடு நிராகரித்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் போடும் புதிய நட்புறவை எப்படி அந்த நாடு ஏற்கும் என்பது வரலாற்றை உற்று நோக்குபவர்களின் கேள்வியாகும்.