வடகொரியா ராணுவத்தின் 75-வது ஆண்டு தின கொண்டாட்டத்தை ஒட்டி நடைபெற்ற அணிவகுப்பில் நீண்ட தூர ஏவுகணைகள் அதிகளவு காட்சிப்படுத்தப்பட்டன. வடகொரியாவின் இச்செயல் உலக அரங்கை அதிர வைத்துள்ளது. வடகொரியா தனது ராணுவத்தை நிறுவிய 75-வது ஆண்டு தினத்தை கொண்டாடியது. இதை அடுத்து பியாங்கோ நகரில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் நீண்ட தொலைவு ஏவுகணைகள் இடம் பெற்றன.

இந்த அணி வகுப்பில் இதுவரை இல்லாத அளவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை மிகப்பெரிய அளவில் வடகொரியா வரிசைப்படுத்தி காட்சிப்படுத்தியது. ஏறத்தாழ ஒரு டஜன் எண்ணிக்கையிலான ஏவுகணைகள் இடம் பெற்றிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த அணிவகுப்பினை அந்த நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் மகளுடன் பார்வையிட்டார். வடகொரியாவின் இந்த ராணுவ அணிவகுப்பு உலக அரங்கை அதிர வைத்துடன் அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு அமைப்பிற்கு சவால் விடும் நோக்கில் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.