பூமிக்கு அருகில் விண் கற்கள் கடந்து செல்வது வழக்கமாக நடக்கும் நிகழ்வு தான். ஒரு விண்கல் அல்லது சிறு கோள் என்பது சூரிய குடும்பம் பிறக்கும் போது முழுமையாக உருவாகாத ஒரு சிறிய கிரகம். சூரியனைச் சுற்றி மில்லியன் கணக்கான சிறுகோள்கள் வலம் வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு பல விண்கற்கள் பூமியை கடந்து சென்றதாக நாசா தகவல் வெளியிட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டும் பல்வேறு விண்கற்கள் பூமியை நெருங்கி வருகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் இன்னும் சில நாட்களில் பூமியின் சுற்றுவட்ட பாதையில் நுழைய உள்ள ஒரு மாபெரும் விண் கல்லை நாசாவின் நிபுணர்கள் கண்காணித்து வருகின்றனர். YY 128 என பெயரிடப்பட்ட விண்கல் ஒரு கிலோமீட்டர் அகலம் கொண்டது. மேலும் இது பூமிக்கு அருகில் உள்ள பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த வாரம் பூமியில் சுற்றுப்பாதையில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விண்கல் 1870 முதல் 4265 அடிவரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கடந்து சென்ற விண் கற்கள் மற்றும் எதிர்காலத்தில் பூமியை கடக்க உள்ள 35 ஆயிரம் விண் கற்களில் பூமியில் மிக அருகில் இருந்து நான்காவது விண்கல் இதுவாகும்.

இந்த மிகப்பெரிய விண்கல் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியாது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேலும் இந்த விண்கல் பூமியில் சுற்றுப்பாதையில் விழுந்து உண்மையான சேதத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.