துருக்கி சிரியா எல்லையை மையமாக கொண்டு கடந்த 6 ஆம் தேதி அதிகாலை 4.20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் சிரியாவையும் துருக்கியையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட அதிர்வில் விண்ணை முட்டும் அளவுக்கு கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் அனைத்தும் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. மேலும் ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் திரும்பிய இடமெல்லாம் பிணக்குவியலும் மர்ம ஓலங்களும் கண்ணீர் வரவழைக்கும் காட்சிகளும் மட்டுமே காண முடிகின்றது. மலை போல் குவிந்து கிடக்கும் கட்டிட ஈடுபாடுகளுக்குள் சிக்கி இருக்கும் மக்களை மீட்பதற்காக மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர். இந்த பணியில் இந்தியா உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் இளவரசர் வில்லியம்- கேட், மன்னர் சார்லஸ் – கமிலா ஆகியோர் இணைந்து துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி அளித்துள்ளனர். இது அவர்கள் தனிப்பட்ட முறையில் அடித்த உதவியை ஆகும் என அரண்மனை வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் இந்த நன்கொடை எவ்வளவு என்பது இதுவரை தெரியவில்லை. மேலும் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து இளவரசர் வில்லியம் மற்றும் கேட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் கூறியிருப்பதாவது “துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பிறகு வெளியான படங்களை கண்டு நாங்கள் மிரண்டு விட்டோம். எங்கள் எண்ணங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்ட மக்களுடன் இருக்கின்றது” என்று கூறியுள்ளனர். இதனை அடுத்து பிரத்தானியா முழுவதும் உள்ள தீயணைப்பு வீரர்கள் அனைவரும் துருக்கிக்கு மீட்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.