ரஷ்ய ஜனாதிபதி புதினுக்கு பிரான்சின் மிக உயரிய விருதான legion of honour என்னும் விருது வழங்கப்பட்டது. இதனை பிரான்சின் அப்போதைய ஜனாதிபதியான Jacques chirac என்பவர் வழங்கியுள்ளார். இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால், அந்த விருதை பிரான்ஸ் திரும்பி பெற வேண்டும் என பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் சமூக ஆர்வலர்களும் அந்நாட்டு ஜனாதிபதியான இமானுவேல் மேக்ரானிடம் கூறியுள்ளனர்.

இது குறித்து பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதியான இமானுவேல் மேக்ரான் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது “இந்த முடிவை எளிதாக எடுக்க முடியாது. அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் அது சரியான தருணத்தில் எடுக்க வேண்டும். அதே நேரத்தில் நான் இதற்கு முன்பு அப்படிப்பட்ட முடிவுகளை எடுத்துள்ளேன். அதையும் நான் மறக்கவில்லை” என்று கூறியுள்ளார். முன்னதாக ஹாலிவுட் பட தயாரிப்பாளரான Harvey Weinstein மீது ஏராளமான பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதால் அவருக்கு வழங்கப்பட்ட Legion of honour விருதை 2017 ஆம் ஆண்டு பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் பதித்தது குறிப்பிடத்தக்கது.