உக்ரைன் அதிபரான ஜெலன்ஸ்கி ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் லண்டனுக்கு சென்று விட்டு பின் பாரிஸ் நகரில் ஒரு அரண்மனையில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் ஜெர்மன் சான்ஸ்லர் ஓலாஃப் ஸ்கோல்ஸ்-வும் இணைந்து கொண்டுள்ளார். இதில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு இருநாட்டு தலைவர்களிடமும் “உக்ரைன் போரில் வெற்றி பெறுவதற்காக போர் விமானங்களை வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனை அடுத்து பிரேசிலில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரசாங்கத்தின் உச்சி மாநாட்டில் மூவரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது “ஜெர்மனியை போல் நாங்களும் உக்கரைனுக்காக இருப்போம். அதோடு ரஷ்யாவுடன் நடக்கும் போரில் உக்ரைன் வெற்றி பெற உதவுவதற்கான எங்கள் உறுதிபாட்டை காட்டுவோம். உக்ரைனுக்கான எங்கள் ஆதரவு எப்போதுமே குறையாது” என்று கூறியுள்ளார்.