ஆக்ரா- உதய்பூர் வழித்தடத்தில் இயங்கிய புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுவதற்காக லோகோ பைலட்டுகள் சண்டையிட்ட காட்சி இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தில் லோகோ பைலட் மற்றும் அவரது உதவியாளர்கள் தாக்கப்பட்டதுடன், ரயிலின் மேலாளர் அறையில் கண்ணாடி ஜன்னல்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

புதிய வந்தே பாரத் ரயில் இயக்க லோகோ பைலட் சண்டையிட்ட காட்சியை பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார் . ரயில்வே போலீசார் வழக்கு பிடித்து விலகி விட முயன்றதும் இந்த பதிவில் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது வந்தே பாரத் ரயில் அதிக நவீன வசதிகளுடன் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

“>