தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் மணிரத்தினம். இவர் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் என்ற பெயரில் 2 பாகங்களாக படத்தை இயக்கினார். இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்தின் 2-ம் பாகம் ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

அதன் பிறகு பொன்னியின் செல்வன் 2 படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா மார்ச் 29-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை மற்றும் ட்ரெய்லரை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிடுகிறார். மார்ச் 29-ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவில் கமல் மற்றும் சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் நாளை மாலை வெளியாகும் நிலையில் தற்போது ட்ரெய்லர் வீடியோவின் க்ளிம்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த  வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வருகிறது.