அணுகுவதற்கு கடினமான மற்றும் போக்கு வசதியற்ற மலை கிராம பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் இதர மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக 10 மாவட்டங்களில் 25 அவசர கால மருத்துவ வாகனங்கள் வாங்குவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது. இதனை வாங்குவதற்கு 1.60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இவை 108 அவசர கால ஊர்திகளுக்கு இணைப்பு வாகனங்களாக செயல்படுவதோடு நோயாளிகளை மருத்துவமனைக்கு துரிதமாக அழைத்து செல்வதற்கும் வழி வகுக்கும். பழங்குடியினர்களின் சுகாதார சேவையை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

நவீன முறையில் உரிய மருத்துவ உபகரணங்கள் இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இருசக்கர அவசர கால வாகனங்களின் சேவை கடைநிலைப் பயனர் வரை சென்றடையும். இந்த வாகனமானது உடனடி மருத்துவ சிகிச்சை அளித்து பயனாளிகளை மேல் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கும். மேலும் மகப்பேருக்கு முந்தைய பராமரிப்பு, மகப்பேறு பாதுகாப்பான பிரசவ போக்குவரத்து மற்றும் தாய் சேயினால மருத்துவ பரிசோதனைக்கான சேவைகளும் இதில் அடங்கும்.

மருத்துவ மற்றும் எதிர்பாராத அவசர நிலைகளில் உதவுவதற்கு ஏற்றவாறு இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டதால் போக்குவரத்து வசதியற்ற பகுதிகளிலுள்ள பயனாளிகளை உரிய 108 அவசர கால வாகனங்கள் உள்ள இடங்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கான இணைப்பு வாகனமாகவும் இது இவை செயல்படும்  எளிதில் அணுக முடியாத 10 மாவட்டங்களிலுள்ள மலை கிராமங்களை தேர்ந்தெடுத்து அங்கு வாழும் பழங்குடியின மக்களுக்கும் மற்றும் இதர மக்களுக்கும் இந்த இருசக்கர முதலுதவி வாகனங்கள் உடனடி சேவை புரியும். இந்த இரு சக்கர அவசரகால வாகனத்தில் ஜி.பி.எஸ் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.