திருச்சி விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவரான செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஒரு கருத்து சொல்லும் போது யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் இருக்க வேண்டும். ஒரு செய்தி தெரியவில்லை என்றால் அதைப் பற்றி பேசக்கூடாது. எந்த கருத்தையும் ஆதாரம் இல்லாமல் பேசுவது, அதன் பிறகு மன்னிப்பது கேட்பது என்பது அரசியல் நாகரிகத்தை குறைத்து வருகிறது.

காங்கிரசுக்கு என கொள்கைகள் கோட்பாடுகள் உள்ளது. எங்களுடைய வரலாற்றை பேசினாலே போதும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகி கூறியது அவருடைய தனிப்பட்ட விருப்பம். கட்சியின் கருத்து அல்ல. எங்களுடைய கொள்கை என்னவென்றால் காந்தி கொள்கை. மது இல்லா தமிழகம் என்பதுதான் எங்களுடைய இலக்கு. காமராஜரை காங்கிரஸ்தான் சொந்தம் கொண்டாட முடியும். தமிழகத்திலும் கூட்டணி இரும்பு கோட்டையாக உள்ளது என்றார்.