இன்று மதியம் 1:30 மணியளவில் தாய்லாந்து, மியான்மர் மற்றும் வடகிழக்கு இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அளவு 7.7 ரிக்டராக பதிவு செய்யப்பட்டு, பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இந்தியாவில் மேகாலயா, கொல்கத்தா, குவாஹாத்தி உள்ளிட்ட கிழக்கு மாநிலங்களிலும் அதிர்வுகள் உணரப்பட்டன. நிலநடுக்க மையம் மியான்மரில் பூமியின் அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது. இது, 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவை நினைவூட்டுகிறது.

இந்நிலையில், Android 15 இயங்குதளத்துடன் வரும் ஸ்மார்ட்போன்களில் நிலநடுக்க எச்சரிக்கை பெற புதிய வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியின் பெயர் Earthquake Detector. இந்த அம்சம் இந்தியாவையும் உட்பட பல நாடுகளில் செயல்படுகிறது. Android பயனர்கள் தங்கள் செட்டிங்ஸில் சென்று இந்த அம்சத்தை செயல்படுத்தினால், அருகிலுள்ள நிலநடுக்கங்கள் குறித்து உடனடி எச்சரிக்கைகளை பெற முடியும்.

1. உங்கள் மொபைலில் Android 15 இயங்குதளம் இருக்கிறதா என்பதை உறுதி செய்யவும். (Pixel, Samsung, OnePlus போன்ற பல ஸ்மார்ட்போன்களில் உள்ளது)

2. Phone Settings > Safety & Emergency என்பதைத் தேர்வு செய்யவும்.

3. அதில் Earthquake Alerts என்ற விருப்பம் தெரியும்.

4. அதனை தட்டி, உள்ளே உள்ள toggle-ஐ ON செய்யவும்.

Android மொபைன்களில் உள்ள accelerometer எனும் சென்சார், ஒரு சிஸ்மோமீட்டராக செயல்பட்டு நிலநடுக்க அதிர்வுகளை உணரக்கூடியது. இந்த அதிர்வுகளை அடிப்படையாகக் கொண்டு, பயனர்களுக்கு உடனடி எச்சரிக்கைகள் வழங்கப்படுகிறது. கூகுளின் தகவலின்படி, இணையத்தின் வேகம் நிலநடுக்கத்திற்கும் வேகமாக உள்ளதால், பயனர்கள் முன்கூட்டியே எச்சரிக்கையைப் பெற்று, பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்களை காப்பாற்ற முடியும்.

இந்த வசதியை அனைத்து Android பயனர்களும் செயல்படுத்தி கொள்ள வேண்டியது அவசியம் எனவும், இது அவசர சூழ்நிலைகளில் உயிர் காக்கக்கூடிய சக்தி வாய்ந்த அமைப்பு எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.