2023 – 2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது . திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு  கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி  தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் 23 – 24 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

காகிதம் இல்லா இ- பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இன்று பிற்பகலில் அலுவல் ஆய்வு குழு கூடி பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது ? என்பது குறித்து முடிவு செய்யும். கடந்த ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையின் படி முதல் முறையாக தமிழகத்தின் வேளாண் துறைக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறைக்கு 6,967 கோடி ஒதுக்கீடு என பட்ஜெட்டில் அறிவிப்பு. அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் ஆயிரம் கோடி ஒதுக்கீடு. மருத்துவ துறைக்கு பட்ஜெட்டில் 18,661 கோடி நிதி ஒதுக்கீடு. மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கும் திட்டத்திற்கு 50 கோடி நிதி ஒதுக்கீடு. சென்னையில் உள்ள நேரு மைதானத்தில் 25 கோடியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். நான்கு இடங்களில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு.