கராச்சி, துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த 6-ஆம் தேதி அதிகாலை வரலாறு காணாத அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு எல்லை நகரங்களில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்கள் சீட்டு கட்டுகள் போன்றவை சரிந்து, பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. இதனையடுத்து   இஸ்ரேல், லெபனான், எகிப்து நாட்டின் கெய்ரோ நகரம் உள்ளிட்ட அண்டை நாட்டு பகுதிகளிலும் நிலநடுக்கத்தின் பாதிப்பு  உணரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 100-க்கும் மேற்பட்ட நிலநடுக்கமும் ஏற்பட்டு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் இரு நாடுகளிலும் மொத்த உயிரிழப்பாக 45 ஆயிரம் எட்டியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டு 11 நாட்கள் ஆகிறது. மீட்பு குழுவினர் தொடர்ந்து விடாமுயற்சியுடன் இப்பணியை செய்து வருவதால்,  துருக்கிக்கு ஆரம்பத்தில் இருந்து மருத்துவ பொருட்கள், குளிர்கால போர்வை, விரிப்பு உள்ளிட்ட பல்வேறு நிலநடுக்க நிவாரண பொருட்களை  இந்திய விமானங்களின் மூலம் தொடர்ந்து அனுப்பியுள்ளது. இதனை தொடர்ந்து வேறு சில நாடுகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட ஜி.என்.என். என்ற செய்தி சேனலில்,  துருக்கி நாட்டிற்கு சமீபத்தில் சென்றடைந்த நிவாரண பொருள்கள் அனைத்தும் கடந்த ஆண்டு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, துருக்கி சார்பாக அனுப்பி வைக்கப்பட்ட பொருள்கள் என்ற அதிரடி தகவலை அந்நாட்டு பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

அதாவது முன்னதாக துருக்கி நாட்டு மக்கள் பாகிஸ்தானுக்கு வெள்ள நிவாரண பொருட்களை அனுப்பியதை, பாகிஸ்தான் என்ற பெயரில் ஸ்டிக்கரை அதில் ஒட்டியுள்ளது. பின் அதை மீண்டும்  துருக்கி நாட்டுக்கே திரும்ப அனுப்பி உள்ளது. இவ்வாறு அந்நாட்டு பத்திரிகையாளர் கூறியுள்ளது பாகிஸ்தானுக்கு ஒரு மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்திவிட்டது. இதேபோன்று, துருக்கியில் நிலநடுக்க பாதிப்புக்கு ஆளான மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் பாகிஸ்தான் பிரதம மந்திரி நிவாரண நிதியை உருவாக்கி அந்நாட்டுக்கு வழங்க முடிவெடுத்தது. அதன்படி ஒரு மாத கால சம்பளத்தை  நட்பு நாட்டிற்கு பாகிஸ்தான் உதவி கரம் நீட்ட முன்வந்தது. ஆனால் அந்த உதவியை ஏற்க துருக்கி தயாராகாத சூழலில், தற்போது இதுபோன்ற செய்திகள் வெளிவந்துள்ளன.  இந்நிலையில் அந்நாட்டை பாகிஸ்தான் ஏதோ ஒரு வகையில் பழிதீர்த்து கொண்டதா? என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.