நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், என்னய்யா….  இந்த காலத்துல தமிழ்,  தமிழ்ன்னு பேசிட்டு இருக்காரு இவருன்னு… தமிழ் படிச்சா வேலை கிடைக்குமா ? சோறு கிடைக்குமா ? நாய், நரிக்கெல்லாம் தான் சோறு கிடைக்குது, அது இங்கிலீஷ் படிச்சா சோறு திங்குது  நீ இப்படியே பேசிக்கிட்டு இரு.  உனக்குள்ள ஒரு உறுதி வேண்டும். தமிழ் எனக்கு வேலையும்,  சோறும் அல்ல. தமிழ் என் உயிர் என்ற அந்த உணர்வு உனக்கு வரணும்.

தமிழ் என்  அடையாளம்…  முன்னாடி நிக்கிற சீமான் என்ன சாதி சொல்லு ?  என்ன மதம்  சொல்லு ? ஆனால் என் வாய் வழியே வருகிற என் தாய்மொழி உலகிற்கு அடையாளப்படுத்துகிறது நான் தமிழன் என்று… இதான் என் அடையாளம் என்று….. போட்டு குழப்பிகாத…. மொழியை அழிய விட்ட இனங்கள் வாழாது. கடுகு அளவு  மொழியை பாதுகாத்த இனங்கள் மழையளவு உயர்ந்து வாழ்ந்திருக்கிறது. சிறுத்து போனாலும் மலையளவு உயர்ந்துரும் மொழியை பாதுகாத்த இனங்கள்… அது ரொம்ப முக்கியம்.

நீ இப்ப யாரு ? நீ தமிழன் இல்ல… நீ தமிங்களன். நீ  ஒரு தங்கிலீஷ்காரன். தமிழோடு சமஸ்கிருதம் கலந்த ஆயிரத்து நூறு ஆண்டுக்கு முன்னாடி கண்காண்கிறோம். 1600 ஆண்டுக்கு முன்னாடி தெலுங்கு… பிறகு 500 ஆண்டு முன்னாடி மலையாளம்…. பிறகு துளு… இப்படி பிரிந்து சிதைந்து போனாய்…. ஒரு தேசிய இனம் உன் கண்ணு முன்னாடி அழிந்து போனது. இப்போது நீ அழிந்து போய்விட்டாய்…. 90 விழுக்காடு நீ தங்கிலீஷ்காரன்.

உன் தெருவில் தமிழில் இல்லை, அது தமிங்கிலம். இப்போ இல்லாட்டி எப்போ…  இது விளம்பரம்….  இத எப்படி எழுதுவ ( I.P.P.O இப்போ) இப்போ சீமான் ஆட்சிக்கு வந்தா ? ஒரே அப்பு…. எப்படி ? ஏன்டா பரதேசிக்கு,  பிறந்த பரதேசி மகனே… ஒன்னு ஆங்கிலத்திலே எழுது.  அந்த மொழியை பெருமைப்படுத்து… . தமிழில் எழுதினால் என் தாய்மொழி தமிழிலே எழுது…  என் தாய் மொழியை வாழ வை. இல்லையென்றால் தூக்கி போட்டு ஒரே மிதி, சங்கறுத்துப்புடுவேன்… அயோக்கிய பய என ஆவேசமானார்.