நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், என் தாய் மொழி  மீட்சியிலிருந்து நான் தொடங்க வேண்டி இருக்கு. தமிழ் மீட்சியே, தமிழர் எழுச்சி. எங்கள் தாத்தன் மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் முன்வைத்த முழக்கம்,  ”வென்றாக வேண்டும்  தமிழ்” அவர் வைத்த முழக்கம் தான். அவருடைய பேரன் நான் பின்னாடி ”அதற்க்கு ஒன்றாக வேண்டும் தமிழர்” என சொல்லுறேன்.

அண்ணல் அம்பேத்கர் ”அதிகாரம் மிக வலிமையானது” என்றார். புரட்சியாளர் அண்ணல் அம்பேதகர் வழி நடக்குற பேரன் நான், ”அதிகாரம் மிக வலிமையானது” என்று சொன்னதோடு, அதை அடைந்து விட்டால் ”அனைத்தும் எளிமையானது” என பின்னாடி ஒட்டிடேன்.அடுத்த அடியை நான் சேந்துட்டேன். பல்லவி அவர் போட்டாரு, சரணம் நான் எழுதிட்டேன். உனக்கு விளங்குதா ? அதுதான் இது.

”1000 ஆண்டுகள் அடிமையாக வாழ்வதைவிட  சுதந்திரமாக சாவது மேலானது”  என வியட் நாம் விடுதலை புரட்சியாளன்  ஹோ சி மின் சொன்னான்.  ”ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நாம் அடிமையாக வாழ்வதைவிட, ஒரு நொடியேனும் சுதந்திரமாக வாழ்ந்து சாவது மேலானது” என  அண்ணல் அம்பேத்கர் சொன்னார். இது ரெண்டையும் உள்வாங்கி ஒருத்தன் இங்குட்டு கிளம்புறான்…. ”ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நாம் அடிமையாக வாழ்வதைவிட,  சுதந்திரமாக சாவது மேலானது” இதுவரைக்கு கோட்பாடு. ”அதும் அந்த  சுதந்திரத்திற்காக போராடி சாவது அதைவிட மேலானது” இது எங்க ஆளு என பிரபாகரன் போட்டோவை காட்டினார்.

உனக்கு புரிஞ்சிட்டு என நினைக்கிறேன். அவங்க ரெண்டு பேரும் பல்லவியில் எங்க ஆளு சரணம் எழுதிட்டாரு. அந்த உயர்ந்த கோட்பாடு கொண்டவன்…  தமிழ் மீட்சி உரனும்,  தமிழர் எழுச்சி வரணும். தமிழ் வாழ வேண்டும்,  அதற்கு மானத் தமிழ் மகன் ஒருவன் ஆள வேண்டும். அதற்கு நாம் தமிழர் ஆட்சி மலர வேண்டும். இதான் கோட்பாடு என தெரிவித்தார்.