
உளவு பலூன் உக்கரைன் விவகாரம் குறித்து சீனாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் அதற்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது. ஜெர்மனி நாட்டில் நடந்த மாநாட்டில் பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் ஒரு பகுதியாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் சீனாவின் தூதர் நேருக்கு நேர் சந்தித்து பேசித்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமெரிக்காவின் இறையாண்மை மற்றும் சர்வதேச சட்ட விதிமீறல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது என சீன தூதரிடம் நேரடியாகவே அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பேசியதாக தெரிவித்தார்.
மேலும் ரஷ்யாவுக்கு ஆயுதம் உள்ளிட்ட ஆதரவை சீனா வழங்கினால் பொருளாதார தடை உள்ளிட்டவற்றை எதிர்கொள்ள நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுக்கும் வகையில் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பேசிய சீன தூதர் அமெரிக்காவின் இந்த செயல் அது வலுவானது என வெளிப்படுத்தவில்லை என்றும் மாறாக அதற்கு எதிராக உள்ள அமெரிக்காவே பெரியவர்கள் என்று விபரிப்பது போல உள்ளது என அவர் விமர்சித்துள்ளார்.