உளவு பலூன் விவகாரம் சூடுபிடித்து வரும் நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெர்மனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சந்தித்து பேசினார். சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் தனது ஐரோப்பியா பயணத்தின் முதல் கட்டமாக பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு சென்றார். அங்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேலை சந்தித்து பேசினார். எட்டு நாட்கள் நீடிக்கும் இந்த பயணத்தில் இத்தாலி, ரஷ்யா, பங்கேரி ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளார்.

இதனிடையே ரஷ்ய பயணத்தின் போது இரு நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் நட்பை மேலும் வலுப்படுத்தும் பல ஒப்பந்தங்கள் குறித்து பேசி இருக்கிறார். இந்த நிலையில் ஜெர்மனியில் முனிஷ் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கில் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆண்டனி பிலிங்டன் கலந்து கொண்டார். அதே கருத்தரங்கில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் அமெரிக்க அமைச்சரை சந்தித்து பேசினார். சீன உளவு பலூன் அமெரிக்காவில் பரந்த விவகாரம் சூடு பிடித்து வரும் நிலையில் இரு நாடுகளின் அமைச்சர் சந்தித்து பேசி இருப்பது கவனம் பெற்றுள்ளது.