துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் 261 மணி நேரங்களுக்கு பிறகு முஸ்தபா மற்றும் ஹமத் அலி ஆகிய இருவரும் மீட்கப்பட்டுள்ளனர்.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முஸ்தபா தனது மனைவி மற்றும் 12 நாள் குழந்தையுடன் பேசும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. பிறந்த 12 நாட்களே ஆன குழந்தையை பார்க்க தான் ஆர்வமாக இருப்பதாக கூறினார்.