செய்தியாளர்களிடம் பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சமூக வலைத்தளத்தில் ஒரு நண்பர் பதிவு போட்டு இருந்தாரு…. இந்த 9 வருட ஆட்சி இதுவே மிகப்பெரிய தேசிய பேரிடர். அதனால் இது தனியாக ஒரு பேரிடராக அவர்கள் பிரித்துப் பார்க்க மாட்டேங்குறாங்க…சென்னை மழை ஸ்டார்ட் ஆகுறதுக்கு முன்னாடி நான் என்னோட தொகுதியிலிருந்து களத்தில் இருந்தேன்.

எல்லாவிதமான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. அதையும் சொல்றேன்….  நான் சேலத்தில் இருந்து மழை பெய்துன்னு தெரிஞ்ச உடனே, சென்னைக்கு அப்படி அங்க போயிட்டேன்….  அனைத்து அமைச்சர்களும் அங்க வந்துட்டாங்க….  முதலமைச்சர் கூட ஒன்றிய பிரதமரை பார்க்கிறதுக்கும்,  இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்கு போனாங்க… அதுவும் ஒரு முக்கியமான வேலை. கூட்டத்தில் பங்கேற்பதற்காகத்தான் போனாரு.

அடுத்த நாள் களத்துக்கு வந்துட்டாங்க… ஒரு நாள் முழுக்க திருநெல்வேலியிலும்,  தூத்துக்குடியிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து களத்தில் தான் அனைவரும் இருக்கின்றோம். இப்பவும் சொல்றேன்….  மறுபடியும் நாளையோ, நாளை  மறுநாளோ  தூத்துக்குடிக்கு செல்லப் போகின்றேன். திரும்பவும் இதை அரசியல் ஆக்கி,  இதுவும் உன் தப்பு,  என் தப்பு என சொல்லல. எல்லாருமே களத்துல தான் இருந்தோம்… இந்த குற்றச்சாட்டுக்கு எல்லாம் நம்முடைய நிதியமைச்சர் அவர்கள்  தெளிவாக பதில் சொல்லி இருக்காரு என தெரிவித்தார்.