2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதியை அவ்வளவு இறுதியில் தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் அதிகாலையில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியால் தமிழகத்தில் சென்னை, குமரி மற்றும் நாகை உள்ளிட்ட கடலோர பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டன. சுனாமியில் சிக்கி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை இறந்து தமிழகமே சோகத்தில் ஆழ்ந்தது. இன்றுடன் 19 வருடங்கள் ஆனாலும் மக்கள் மனதில் ஆறாத ரணமாக இது பதிந்து விட்டது. இந்த நாள் தமிழகத்தின் கருப்பு தினமாகவே பார்க்கப்படுகிறது.