தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் தளபதி விஜய் மற்றும் தல அஜித். நடிகர் விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி இரு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு நடிகர் அஜித் ஏகே 62 திரைப்படத்திற்காக தயாராகி வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய் வில்லு படத்தில் நடித்த போது கொடுத்த ஒரு பேட்டி தற்போது வைரல் ஆகி வருகிறது. அந்த பேட்டியில் நடிகர் விஜய் தன்னுடைய சமகாலத்து நடிகர்களான விக்ரம், சூர்யா, சிம்பு ஆகியோர் பற்றி கூறினார். அப்படி கூறும் போது நடிகர் அஜித்திடம் தனக்கு பிடித்த ஒரு விஷயம் குறித்தும் பேசினார். அதாவது நடிகர் அஜித்தின் தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடிக்கும் என விஜய் கூறினார். மேலும் இந்த விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.