தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் கௌதம் கிச்சலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நிலையில் நீல் என்ற அழகிய ஆண் குழந்தை தற்போது இருக்கிறது. குழந்தை பிறந்த பிறகும் தொடர்ந்து காஜல் அகர்வால் சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது கருங்காப்பியம், இந்தியன் 2 போன்ற சில படங்களில் காஜல் நடித்து வருகிறார்.

குழந்தை பிறந்த பிறகு சற்று குண்டாக இருந்த காஜல் அகர்வால் தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து பழைய நிலைக்கு வந்துள்ளார். மேலும் காஜல் அகர்வால் தன் கணவருடன் ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் காஜல் மீண்டும் ஒல்லியாகிவிட்டார் என்று கூறி வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by @varindertchawla