நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தாய் மொழி மீட்சி வரணும்னா…. என் பிள்ளைகளுக்கு எல்லா கல்வி பாடங்களையும் தமிழ்ல கொண்டு வரணும். ஆங்கிலத்தை கட்டாய பாட மொழியா ஆக்கணும்…. ஆங்கிலேயர்களுக்கு இணையாக  ஆங்கிலம் எழுத, படிக்க, பேச புலமையை கொடுக்கணும். விண்ணூர்தி பயிற்சி எடுத்துட்டு வெள்ளைக்காரன் ஓட்டுறான்….  அதுமாதிரி வெள்ளைக்கார ஆசிரியர்கள் வேணாம்….. எங்கள் பிள்ளைகள்….. புலம்பெயர்ந்த எங்கள் பிள்ளைகள்… பிரமாதமாக ஆங்கிலேயருக்கு நிகராக ஆங்கிலம் பேசுகிறார்கள்…..

அவர்களை சிறப்பு ஆசிரியர்களாக இரு மாத கோடை விடுமுறை காலங்களில் சிறப்பு பயிற்சி அளிக்கணும்.  அமெரிக்கா, பிரிட்டன், ஆங்கில உச்சரிப்பு ஆங்கிலேயனுக்கு  இணையாக எழுத, பேச, படிக்க வேண்டும்.  ஆனால் தாய்மொழி அழியாமல் காக்க தாய்மொழி கல்வி. என் நாட்டு அறிவியலை…. என் நாட்டு புவியலை… எந்நாட்டு வரலாறை…..  எந்நாட்டு வேளாண்மையை….  எதற்காக நான் ஆங்கிலத்தில் படிக்கச் வேண்டும்?

கோவை வேளாண் கல்லூரியிலே ஆங்கிலம் பயிற்று மொழி என்றால் ?  தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், வெள்ளரிக்காய்,  எப்படி விளைய வைப்பது என்று கற்றுக்கொண்டு,  ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டனில் போய் கத்தரிக்காய் நடப்போறானா?  கோவைல தான் நட போறான்.  அதுக்கு  எதுக்கு இங்கிலீஷ் ? ஒரு அடிப்படை அறிவு இருக்கா ?

என்னிடம் கேட்கிறானே….  சீமான் உனக்கு இங்கிலீஷ் நாலேஜ் எப்படி இருக்கு ? முதல்ல உனக்கு நாலேஜ் இருக்கா? இங்கிலீஷ் நாலேஜ் இட்ஸ் அ  லாங்குவேஜ்… அது ஒரு மொழி,  அறிவல்ல. முத அத தெரியாம…  நீ என்கிட்ட கேள்வி கேட்கக்கூடாது,  புரியுதா? … ஆங்கிலம் ஒரு மொழி அவ்வளவுதான். அவசியப்படும் போது கற்றுக் கொள்ளலாம். இந்திய ராணுவத்தில் பணி செய்தார்கள்…  இங்க உட்கார்ந்து இருக்கிறார் என் தம்பி பூமி. அவரோடு சில பாதுகாப்பு படை வீரர்கள்,  முன்னாள் பாதுகாப்பு படை இருக்கிறார்கள்…. 

எல்லாம் அழகாக இந்தி பேசுவார்கள்.  ஹிந்திகாரர்கள் அளவுக்கு பேசுவார்கள்,   தமிழ்நாட்டில் ஹிந்தி கற்றுக் கொண்டு ராணுவத்துக்கு போனார்களா ? அங்க போய் கற்றுக் கொண்டார்களா ?  சேர்ந்திட்டார்,  கற்றுகிட்டார். தேவைப்படுது கற்றுக் கொள்ளலாம். ஒரு மொழியை கற்றுக்கொள்ள அதிகபட்சம் இரண்டு மாதங்கள்.. ரொம்ப அதிகமா போனால் ஆறு மாதங்கள். ஆறு மாதத்தில்…. ஆறே மாதத்தில் அழகாக ஆங்கிலம்  பேசலாம் என சுவருல எழுதி இருக்கான் வாங்கள்…. எங்க இன்ஸ்டிசனுக்கு…. ஏண்டா 6 மாசத்துல ஆங்கிலத்தை அழகா பேசலாம். அன்னை தமிழை தாய் மொழியில் பேச முடியாதா டா?  பேச கூடாதா ?

ஒரு கேள்வி நீ உனக்குள்ளே கேட்டுப் பாறேன்.. என் தாய் மொழியை நான் பேசாம வேற எவன்டா பேசுவான். நான் பேசல… வேற எவன் பேசுவான்…  பேசணும், பெருமிதம்,  திமிரோட பேசணும். என் தாய் மொழியை பேசணும்….  உலகத்தின் முதல் மொழி மகன் நான். உலகிற்கு அறிவியல் நாகரீகம், கலை, இலக்கியம், பண்பாடு, வேளாண்மை, எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்த பேரினத்தின் மகன் நான்.  என் தாய் மொழியை அழிய விடமாட்டேன்.

 தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே.. தமிழை பழித்தவனை தாயே தடுத்தாலும் விடாதே.. இது நம்முடைய புரட்சி பாவலன் நமக்கு முன்வைத்த முழக்கம். எப்படி இருக்கு பாருங்க ?  கண்ணு முன்னாடி உன் மொழி அழிந்து சிதைந்து விட்டது….  நீ ஒரு தமிங்களம்,  தங்கிலீஷ் பேசுகிற ஒரு இனம் ஆயிட்ட … இப்போ நீ தமிழர்கள் அல்ல,  தமிங்கிலர்கள். இது தமிழ் நாடு அல்ல. தமிங்கல நாடு. இப்போ இந்த கடை தெருவுல எல்லாம் பாரு என தெரிவித்தார்.