செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு முன்னுரிமை கொடுங்க. செவிலியர்களுக்கு முன்னுரிமை கொடுங்க.  இன்னும் சொல்லப்போனால்  இரண்டு வருடத்திற்கு ஒப்பந்தம் செய்யறாங்க. PG டாக்டர் MD, MS முடிச்சா அவர் ரெண்டு ஆண்டு பணி புரிந்தவுடன் அவர்களை விடுவித்து விடுகின்றார்கள்.

ஏன் ரிலீவ் பண்றீங்க ? அந்த பணியை பயன்படுத்துங்க. அம்மாவுடைய ஆட்சி காலத்துல நாங்க எல்லாம் அப்படித்தானே பயன்படுத்தினோம். சுகாதாரத்துறை சீர்கேடு அடைந்த துறையாக இந்த துறை இருக்கிறது.  அரசினுடைய கவனம்….. முதலமைச்சருடைய கவனம் சுகாதாரத் துறையில் இருக்க வேண்டும். சுகாதாரத்துறை அமைச்சர்  நிறையா  பேசுகிறார். செயல்பாடு இல்லை.

மருத்துவமனையில் 24 ஹவர் டூட்டி என்று சொல்வோம். 24 மணி நேரம் டூட்டி முடிஞ்சா…  அடுத்த நாள் அவருக்கு ஆஃப். ஆப் என்பது அவருக்கு கேப். அவர் அன்னைக்கு இல்லனா….  அந்த மருத்துவருக்கு போன் பண்ற மாதிரி போன் பண்ணி, அவரை  சஸ்பெண்ட் பண்றாங்க. இதெல்லாம் நியாயம் இல்ல. ஒரு துறையே செம்மையாக வழிநடத்தனும்…. சீராக வழி  நடத்தணும்….  மருத்துவர்களையும்,  செவிலியர்களையும் கம்படபில் ஜோன்ல வைக்கணும். அந்த துறை சார்ந்தவர்களை நல்ல மனநிலையில் வச்சாதான் அவங்க சிகிச்சை குடுப்பாங்க என தெரிவித்தார்.