சமூக வலைதளங்களில் தற்போது ஒரு 4 வயது சிறுவனின் கார் டிரைவிங் வீடியோ காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் பேஸ்மென்ட் பார்க்கிங்கில், தனது தந்தையின் மடியில் அமர்ந்து கொண்டு அந்தச் சிறுவன் காரை ஸ்டீயரிங் பிடித்து ஓட்டுகிறான்.

“வண்டியை எங்கே நிறுத்த வேண்டும் என்று தெரியுமல்லவா?” எனத் தந்தை கேட்க, மிகுந்த தன்னம்பிக்கையுடன் “தெரியும்” எனக் கூறி, ஒரு அனுபவம் வாய்ந்த டிரைவரைப் போல மிகச் சரியான கோணத்தில் காரைப் பார்க்கிங் செய்கிறான் அந்தச் சிறுவன். இதைப் பார்த்த பலரும் அந்தச் சிறுவனின் அபாரக் கட்டுப்பாட்டைக் கண்டு “சின்ன உஸ்தாத்” எனப் பாராட்டி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Dilsher Kohli (@dilshersinghkohli)

இந்த வீடியோ ஒருபுறம் வியப்பை ஏற்படுத்தினாலும், மற்றொருபுறம் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. காரின் பிரேக் மற்றும் ஆக்சிலரேட்டர் தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், சிறுவயது குழந்தையிடம் ஸ்டீயரிங் மற்றும் கியரை ஒப்படைப்பது சட்டப்படி குற்றம் என்றும், இது மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

“சிறுவர்களின் கையில் ஸ்டீயரிங்கைத் தருவது சாலை பாதுகாப்பு விதிகளுக்கு எதிரானது, பெற்றோர் தவறான முன்னுதாரணத்தை உருவாக்குகிறார்கள்” எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திறமை என்ற பெயரில் விபரீத விளையாட்டில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.