உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில், நர்சிங் பயிலும் மாணவி ஒருவர் தனது சக நண்பர்களுக்கு பிறந்தநாள் விருந்து அளித்துள்ளார். இதில் 6 மாணவிகள் மற்றும் 2 முஸ்லிம் மாணவர்கள் உட்பட 4 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவின் போது, பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் திடீரென அத்துமீறி நுழைந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அங்கு இருந்த இரண்டு முஸ்லிம் மாணவர்களை “லவ் ஜிகாத்” செய்வதாகக் கூறி, கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



​சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட மாணவர்களையே துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. விசாரணையில் மாணவர்கள் மீதான லவ் ஜிகாத் புகார்கள் முற்றிலும் ஆதாரமற்றவை எனத் தெரிந்தும், அமைதியை கெடுத்ததாக கூறி அந்த இரண்டு முஸ்லிம் மாணவர்கள் மீதே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்ட பஜ்ரங் தளம் அமைப்பினர் மீது எந்தவிதமான சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களைப் காவல்துறை அங்கிருந்து அனுப்பி வைத்தது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.