
செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி, திருவண்ணாமலை முழுவதும் நல்ல விவசாய நிலம் இருக்கிறது. அந்த விவசாய நிலங்களை நீங்கள் அப்புறப்படுத்தாதீர்கள் என்று தான் கேட்கிறார்கள். ஆனால் மத்திய அரசினுடைய ஆராய்ச்சிக்காக…. கிட்டத்தட்ட 10,000 ஏக்கர் நிலம் 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த நிலம் இதுவரை பயன்படுத்தப்படவில்லை… முறையாக பயன்படுத்தப்படவில்லை….. அந்த நிலத்தை கூட நீங்கள் இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற கேள்வியாக… ஆலோசனையாக… முன் வைக்கிறார்கள்.
ஆனால் மத்திய அரசு கையகப்படுத்திய 10,000 ஏக்கர் நிலத்தை இதுவரை மத்திய அரசு பயன்படுத்தவில்லை. விவசாயத்திற்கும் பயன்படாமல் தான் கிடக்கின்றது. அந்த இடத்தை எல்லாம் நீங்கள் கையகப்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்ளாமல், ஏற்கனவே பயன்படுத்தக்கூடிய விவசாய நிலத்தை கையகப்படுத்துவதே வேலையாக வைத்திருக்கிறார்கள்.
திருவண்ணாமலையில் இது நடந்து கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட இடத்தில்…. இப்படிப்பட்ட காலகட்டத்தில் விவசாயிகளை கைது செய்து, ஆளுக்கு ஒரு சிறைச்சாலை…. ஒவ்வொரு சிறைச்சாலைக்கும் பிரித்து அனுப்புவது, மிக மிக அயோக்கியத்தனமானது… கீழ்த்தனமானது. போராடக்கூடியவர்களை, அவர்கள் வீட்டிலிருந்து… மாவட்டத்திலிருந்து…. பாளையங்கோட்டை சிறைக்கும்…. திருச்சி சிறைக்கும்…..கோவை சிறைக்கும்….மதுரை சிறைக்கும் பிரிச்சி அனுப்புகிறீர்கள் என்றால், நீங்கள் வெள்ளைக்கார ஆட்சியா நடத்துகிறீர்கள் ? இவர்கள் என்ன தீவிரவாதிகளா ? என கேள்வி எழுப்பினார்.