சமூக வலைத்தளங்களில் பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது குழந்தைக்குப் பாசத்துடன் உணவூட்டும் நெகிழ்ச்சியான காணொளி வெளியாகிப் பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. அந்த ஆட்டோ ஓட்டுநர் தனது வாழ்வாதாரத்திற்காகப் பணிபுரியும் அதே வேளையில் தனது சிறுவயது மகளையும் பாதுகாப்பான முறையில் இருக்கை அமைத்து ஆட்டோவிலேயே அமர வைத்துள்ளார்.
During a busy day, an auto driver (a mother) stops her auto to feed her little daughter.
Love the way she secured her little one😍
Mother’s love can overcome all hurdles. pic.twitter.com/oBrgUXwsLo
— Tathvam-asi (@tathvamasi6) March 5, 2026
சாலையோரம் ஆட்டோவை நிறுத்திவிட்டுத் தனது மகளுக்கு அவர் அன்புடன் உணவூட்டும் காட்சியைக் கடந்து சென்ற ஒருவர் காணொளியாகப் பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவைப் பார்த்த இணையதளப் பயனர்கள் பலரும் ஒரு தாயின் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
வசதி வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் தனது குழந்தையைத் தன்னுடனேயே வைத்துப் பராமரித்து வரும் அந்தப் பெண்ணின் உறுதி மற்றும் தாய்மையின் மகத்துவத்தை இந்தக் காணொளி பறைசாற்றுவதாக நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
