மாஸ்கோவை அடுத்த ஃப்ர்யாசெவோ ரயில் நிலையம் (Fryazevo Station) அருகே, கடந்த டிசம்பர் 12ஆம் தேதி ஒருவர் அதிவேக ரயிலால் மோதப்படும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோர்க்கி ரயில் பாதைக்கு அருகில் தண்டவாளத்தின் ஓரமாக நடந்து சென்ற அந்த நபர், தன்னைச் சுற்றியுள்ள சூழலைக் கவனிக்காமல் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, வேகமாக வந்த ரயில் மோதிச் சில அடி தூரம் தூக்கி வீசப்பட்டார்.
Horrible railway incident near Moscow: a young man was killed after being struck by the Burevestnik high-speed train on the Gorky line at Fryazevo station late on December 12.
Reports say he was wearing headphones. pic.twitter.com/vCBrFVLXdO
— Brian McDonald (@27khv) December 14, 2025
மீடியா அறிக்கைகளின்படி, விபத்து நடந்த நேரத்தில் அந்த நபர் ஹெட்போன் அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதுவே அவரது கவனக்குறைவுக்குக் காரணமாக இருக்கலாம் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இணையத்தில் வெளியான பிறகு, பல பயனர்கள் அந்த நபரின் அலட்சியம் குறித்துக் கவலை எழுப்பினர். அதே சமயம், சிலர் இது தற்கொலை முயற்சி என்றும், ஒரு சிலர் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
“ஹெட்போன்கள் பிளேலிஸ்ட்களுக்குச் சிறந்தது, ஆனால் ரயில் பாதைகளுக்கு அருகில் இருக்கும்போது ஆபத்தானது” என்று ஒரு பயனர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
