பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலகம் முழுவதும் 1200 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் ஆலியா பட் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள்.

இந்நிலையில் ஜப்பான் நாட்டில் ஆர்ஆர்ஆர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் ஆஸ்கார் விருதுக்குப் பிறகு படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தற்போது ஜப்பானில் மட்டும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் 100 கோடி வசூல் அடைந்துள்ளது. மேலும் இதனால் இன்னும் அதிக தியேட்டர்களில் படத்தை திரையிட படக்குழு முடிவு செய்துள்ளது.