பாலிவுட் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் போனி கபூர். இவர் தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு போன்ற படங்களை தயாரித்துள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் பே வியூஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பாலிவுட் மட்டுமின்றி பிறமொழி படங்களையும் போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த பிஎம்டபிள்யூ காரில் போலீசார் சோதனை நடத்தினார்.

கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படும் நிலையில் பிஎம்டபிள்யூ காரையும் போலீசார் சோதனை செய்துள்ளனர். அப்போது காரில் இருந்து 5 பெட்டிகளில் 66 கிலோ மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 39 லட்சம் ஆகும். பிஎம்டபிள்யூ கார் தயாரிப்பாளர் போனி கபூரின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கார் ஓட்டுநர் சுல்தான் கான் மற்றும் உடனிருந்த ஹரிசிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காரில் இருந்த வெள்ளி பொருட்கள் போனி கபூர் குடும்பத்திற்கு சொந்தமானது என அவர்கள் கூறியுள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.