“Project Tiger” திட்டம் 50 ஆண்டுகளை நிறைவடைந்ததை முன்னிட்டு சமீபத்திய புலிகளின் கணக்கெடுப்பு தரவுகளை பிரதமர் மோடி வெளியிட்டார். அந்த வகையில் இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 3167 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று 1973 ஆம் ஆண்டு நாட்டில் 9 புலிகள் காப்பகம் இருந்த நிலையில், தற்போது 53 புலிகள் காப்பகங்கள் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் “Project Tiger” 50 ஆண்டு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதாவது “உலகிலேயே ஆசிய சிங்கங்கள் உள்ள ஒரே நாடு இந்தியா. இயற்கையைப் பாதுகாப்பது இந்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கம். தி எலிபண்ட் விஸ்பர்ஸ் ஆவணப்படம் இயற்கைக்கும் உயிரினங்களுக்கும் இடையிலான உறவைப் பற்றிய நமது பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. புலிகள் செழிக்க சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பு தற்போது உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.