எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஓபிஎஸ் க்கு பதில் ஆர்பி உதயகுமாருக்கு வழங்க அதிமுக கோரிக்கை வைத்தது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக இதுவரை 10 முறை கடிதம் அளித்துள்ளோம். ஓபிஎஸ் உள்ளிட்ட மூன்று எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பேரவையில் இபிஎஸ் கோரிக்கை வைத்தார்.

ஒருவர் எந்த சின்னத்தில் வென்று பேரவைக்குள் வருகிறாரோ,  அதே சின்னத்தில் தான் கடைசிவரை பார்ப்போம் என சபாநாயகர் பதில் அளித்தார். எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை இல்லை.

இருக்கை விவகாரத்தில் நான் வீம்புக்காக செய்யவில்லை, சட்டப்படி நடக்கின்றேன். யாருக்கும் சிறு மனக்குறை வரக்கூடாது என்று தான் இந்த அவையை நடத்தி வருகிறோம். இடையூறு செய்ததாலேயே வெளியேற்ற உத்தரவிட்டேன். இனி இவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை என அப்பாவு தெரிவித்தார்.

பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்;

சட்டப்பேரவையில் அமளியில்  ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் சபாநாயகர் உத்தரவின் பேரில் வெளியேற்றம். எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தை கண்டித்து பேரவையில் அதிமுகவினர் அமலியில் ஈடுபட்டனர். சபாநாயகர் உத்தரவின் பேரில் வெளியேற்றப்பட்ட அதிமுக உறுப்பினர்கள் அவைக்கு வெளியே முழக்கமிட்டனர்.

ஓபிஎஸ் சொல்லிட்டோரை பதவி நீக்கம் செய்க:

ஓபிஎஸ் உள்ளிட்ட மூன்று எம்எல்ஏக்களை பதிவி நீக்கம் செய்ய வேண்டும் என பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்தார். கட்சி பிரச்சினையை தீர்க்கும் இடம் இது இல்லை என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு பேச்சு.

அவை குறிப்பில் இருந்து நீக்குங்க; 

உட்கட்சி பிரச்சனை குறித்த பேச்சுக்களை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என ஓபிஎஸ் பேரவையில் பேசி உள்ளார்.  அதிமுக தலைமை தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தற்காலிகமானது என்றும் ஓபிஎஸ் பேச்சு.