வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரையில் இன்று கனமழை பெய்யும்.  அதே போல விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு என கூறி உள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், தமிழகத்தில் அதிகபட்சமாக களியல்,  பாப்பிரெட்டிப்பட்டி,  காட்பாடி பகுதிகளில் தலா 7  சென்டிமீட்டர் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.