செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒரே குடும்பத்தில் இருப்பவர்கள் ஒரு பாகத்தில் தான் போய் ஓட்டு போடணும்.  ஒரு குடும்பத்தில் அப்பா, புள்ள, மகள், மனைவி இப்படி இருப்பாங்க. அப்பாவ புள்ளைய ஒரு பாகத்தில் ஓட்டு போடுவாங்க….  மகள், அவருடைய கணவர் வேற பாகத்துல ஓட்டு போடுவாங்க….  இது எப்படி சரி வரும் ? எங்க பகுதி செயலாளராக இருக்கக்கூடியவரின் வீட்டிலேயே…..  எலக்ஷன் கமிஷன் பிரிச்சிருக்கு….. குடும்பத்தையே பிரிக்கிற வேலையை இந்த எலக்சன் கமிஷன் ஏன் செய்யணும்?

இதெல்லாம் தப்பு.  அதனால் எலக்சன் கமிஷன் இந்த மாதிரி குடும்பத்தை பிரிக்கின்ற வேலை செய்யாமல் இருக்கனும்.  இந்த குளறுபிடிக்கு எல்லாம்  முற்றுப்புள்ளி  வைக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் உடைய ஒரு முக்கியமான  கடமை. குளறுபடி இல்லாத  வாக்காளர் பட்டியை வெளியிட வேண்டும் என்பதுதான் எல்லா கட்சி விருப்பம்.  எங்கள் கட்சியின் விருப்பமும். தேர்தல் ஆணையம் வாக்குபதிவில் உள்ள குளறுபடியை நீக்கணும்.   திரும்ப திருமா எழுதி எழுதி கொடுத்தோம் என்றால்? ஸ்கூல் பசங்க மாதிரி இம்போசிஷனா  எழுதி கொடுக்குறோம்.

ஒரு தடவை எழுதிக் கொடுத்தால் உறுதி படுத்துங்க. உண்மையாக இருந்தால் இறந்தவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில்  நீக்கி விடுங்கள். வாக்காளர் இடமாற்றம் செய்திருந்தால் அவர்கள் எங்கு இருக்காங்களோ, அங்க கண்டுபிடித்து… அந்த இடத்தில் ஓட்டு கொடுங்கள்…. இடம் மாறி இருக்கும் வாக்காளர்களை சரி செய்வதில்லை, இறந்த வைக்கலாரை நீங்குவதில்ல…. பிழைகளை திருத்துவது இல்லை… அதே பட்டியல் அப்படியே தொடர்ந்தால் முகாம் எதற்கு ? வாக்காளர் பட்டியலில் உள்ள  திருத்தங்களை எல்லாம் வாங்கி,

டீம் போட்டு எலெக்ஷன் கமிஷன் வேலை செய்யணும்…   எலக்சன் கமிஷன்  இவ்வளவு ஆட்கள் கேட்டாலும் தமிழக அரசு கொடுக்கும். தமிழ்நாட்டில் 27 லட்சம் பெட்டிஷன் வந்திருக்கிறது… ஒரு வாரத்தில் எல்லாத்தையும் சரி செய்யணும் அப்படின்னு ஸ்ட்ரிக்ட்டா தேர்தல் ஆணையம் டிஸ்கஸ் பண்ணி, ஸ்டேட் கவர்ன்மெண்ட் கிட்ட சொன்னால்… மாநில அரசு   ஆளு கொடுக்க போகிறார்கள்.மாநில அரசு கொடுத்து தான் ஆகணும் என தெரிவித்தார்.