திருவண்ணாமலையில் தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டம் துர்க்கையம்மன் கோவில் அருகிலுள்ள இணை சார்பதிவாளர் எண் 1 அலுவலகத்தின் முன்பு,  மாவட்ட நிர்வாகி தென்றல் தலைமையில் நடந்தது. இதற்கு சங்க நிர்வாகிகள் திரிபுரசுந்தரி, தமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து ”ரியல் எஸ்டேட் சட்டத்தின் படி புரமோட்டார் அல்லாத ஏழை மக்களின் மனைகளாக பதிவதில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும். மேலும் அதிகரித்து வரும் மக்கள் தேவைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

அனைத்து துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பி, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். தமிழக அரசின் இருமொழி கொள்கைக்கு எதிரான 3-வது மொழி தேர்வை ரத்து செய்ய வேண்டும். அரசாணை 80-ன் படி பணியிடை நிக்கத்திலுள்ள அனைத்து பணியாளர்களையும் உடனடியாக பணியில் அமர்த்திட வேண்டும். பின்னர் பழைய  ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
முழக்கமிட்டனர்.