ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப் பொங்கல் தினம், திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. ஆகவே நேற்று முன்தினம் திருவள்ளுவர் தினத்தையொட்டி மதுபான கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில்  அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது நேற்று முன்தினம் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 66 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 644 மது பாட்டில்கள் மற்றும்  8 ஆயிரத்து 400 ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.