திருப்பதி வெங்கடாசலபதி கோயில் தரிசனம், தங்கும் இடம் முன் பதிவு, நன்கொடைகள் ஆகிய சேவைகளை ஒருங்கிணைக்கும் புது மொபைல் செயலியை திருப்பதி தேவஸ்தானமானது அறிமுகப்படுத்தி உள்ளது. திருமலை கோயிலின் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய நிகழ்நேர அறிவிப்புகள் உட்பட பல அம்சங்களை “TTDevasthanams” வழங்கும் என TTD தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டி தெரிவித்து உள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று முறைப்படி ஒரு புது மொபைல் செயலியான TTDevasthanamsஐ திரு ஒய்.வி.சுப்பா ரெட்டி அறிமுகப்படுத்தினார். ஆகவே பக்தர்கள் இந்த நவீன தொழில்நுட்ப மொபைல் செயலி வாயிலாக அனைத்து சேவைகளையும் அணுக முடியும் என்று அவர் தெரிவித்தார்.