2023 ஜனவரி மாதம் முதல் வட்டி விகிதங்களை அண்மையில் திருத்திய அலுவலக மாத வருமான திட்டம் பற்றி ஏராளமான மக்கள் அறிந்திருக்கின்றனர். இத்திட்டத்தில் முதலீட்டாளர்கள் வருடத்திற்கு 7.1% எனும் அளவில் வட்டியை பெறுகின்றனர். எனினும் SBI வழங்கும் மற்றொரு மாத வருமான திட்டம் அனைவருக்கும் லாபகரமானதாக இருக்கும். அது SBI-ன் வருடாந்திர வைப்புத் திட்டம் ஆகும். ஏனெனில் இது உத்தரவாதமிக்க ஒரு வருமானத்தினை அளிக்கிறது. SBIன் வருடாந்திர வைப்புத்திட்டத்தில் ஒரு மொத்த தொகையை முதலீடு செய்யவேண்டும்.

அதன்பின் வங்கியிலிருந்து மாதந்தோறும் ஓய்வூதியம்(அ)இஎம்ஐ வடிவில் ஒரு நிலையான தொகையானது கிடைக்க துவங்கும். மாதந்தோறும் நிலையான தொகை வட்டியின் ஒரு பகுதியையும், அசல் தொகையின் ஒரு பகுதியும் இதில் அடங்கும். SBI வருடாந்திர வைப்புத்திட்டம் முதலீட்டாளர்கள் தங்களது ஆரம்ப வைப்பு தொகைக்கு ஈடாக முன் தீர்மானிக்கப்பட்ட மாதாந்திர தொகையினை சமமான மாதாந்திர தவணைகளில் பெற்றுக் கொள்ளலாம். இதே போன்று வருடாந்திர வைப்புத் திட்டத்தில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையினை வங்கிக்கு வழங்குகிறீர்கள் எனில், அது முதலீடு செய்த தொகைக்கு வட்டி உடன் திருப்பிச் செலுத்துகிறது.