2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. வரும் பிப்ரவரி 1ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. நாட்டின் இறுதி முழு பட்ஜெட்டை இன்னும் 3 நாளில் நிர்மலா சீதாராமன் அறிவிக்கவுள்ளார்.  அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால், பாஜக தலைமையிலான இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட்டாக இது இருக்கிறது.

இதில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகவுள்ளது. குறிப்பாக, வீட்டிலிருந்தே பணிபுரியும் ஊழியர்களுக்கு allowance வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்திட்டம் கொண்டு வரப்பட்டால், Work From Home முறையில் வேலை செய்பவர்களுக்கு வருமான வரியில் மிகப்பெரிய சலுகையை பெற முடியும்.